Categories
தேசிய செய்திகள்

 கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடும் இந்தியா… 100 சதவீதம் பேர் குணம்…!!!

இந்தியாவில் கடந்த மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 100 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்தமாக அதிக அளவில் காணப்பட்டாலும், கடந்த ஒரு வாரமாக நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டுதான் வருகிறது. இந்தியாவில் கடந்த மாதத்தில் மட்டும் 100 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களில் 82 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 10 லட்சத்திற்கும் குறைவானவர்களே ஆவர். மொத்த பாதிப்புகளில் சிகிச்சை பெறுபவர்கள் சிறிய விகிதம் தான் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கூறியுள்ளது.

 

Categories

Tech |