கொரோனா பாதிப்பால் லத்தீன் மற்றும் அமெரிக்காவில் தற்போது வரை 2.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் உகான் நகரின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலக அளவில் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து பிரேசில் நாடு இருக்கின்றது. நாடுகள், தீவுக் கூடங்கள் மற்றும் பல பிரதேசங்களை உள்ளடக்கியுள்ள லத்தீன் மற்றும் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மற்றும் மிக பெரிய நாடாக பிரேசில் இருக்கின்றது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,204 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில், பிரேசிலில் தற்போது வரை 1.12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் பிரேசிலில் தினம்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேலானோர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெரு, கொலம்பியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா பாதிப்புகள் நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகின்றன. கொரோனா பாதிப்பால் பிரேசில் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் தற்போது வரை 2.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் உலக அளவில் அதிக பாதிப்புகளை கொண்ட பகுதியாக லத்தீன் அமெரிக்கா இருக்கின்றது.