உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான முறையான சிகிச்சை முறைகளும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின்னான நீண்ட கால பாதிப்புகளை பற்றியும் பல நாட்டு நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூகேசில் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் மற்றும் சுவாச நிபுணரான பீட்டர் வார்க் கூறியது, கொரோனா பாதிப்புகளை பற்றி எளிதில் நாம் புறந்தள்ளி விடலாம். ஆனால் ஆசியாவில் 5% பேருக்கு இதன் அறிகுறிகளால் நீண்ட கால பாதிப்புகள் இருக்கும் என எடுத்துக் கொண்டால் கூட, ஆஸ்த்ரேலியாவில் 5 லட்சம் பேரை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
அதனை தொடர்ந்து நீண்டகால கொரோனா பாதிப்புகள் பல விஷயங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் அதன் தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்துள்ளார். அந்த நாட்டு சுகாதார மந்திரி மார்க் பட்லர் கடந்த ஜூனில் கூறியது, அடுத்த சில ஆண்டுகளில் நீண்ட கால கொரோனா பாதிப்புகளை கொண்ட மக்களின் மிகப்பெரிய அலையை நாட்டில் எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து கொரோனாவின் நீண்டகால பாதிப்புகளுக்கான அறிகுறிகளை கொண்டிருக்கும் 14 லட்சம் பேர் வரை நினைவு வைத்துக் கொள்ளுதலில் சிக்கல், மனநிலை தெளிவில்லாமை, கவனம் செலுத்த முடியாமை உள்ளிட்டவை மயக்கம் அல்லது தலைவலி ஆகியவற்றையும் கொண்டிருக்க கூடும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று மந்திரி மார்க் பட்டலர் கூறினார்.
இந்த பல்வேறு சிக்கலான அறிகுறிகள் நீண்ட கால கொரோனா பாதிப்புகளை இன்னும் கடினமாக ஆக்குகிறது. இதனால் நீண்ட கால கொரோனாவை கண்டறிவது, ஆய்வு செய்வது மற்றும் அவற்றுக்கு சிகிச்சை அளிப்பது சிக்கல் ஆகிறது. ஏனென்றால் அதற்கான சிகிச்சைக்காக ஒற்றை பரிசோதனை முறை கூட இல்லை. ஆனால் நீண்ட கால கொரனாவின் ஆபத்துக்களை குறிக்கும் பணியை தடுப்பூசி செய்யும் என வார்க் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியது, சுகாதார நிபுணர்கள், கொரோனாவை நீண்டகால பாதிப்பு மேலாண்மை பணிகளுக்கு சிறந்த முறை பயிற்சி பெற்றிருப்பதுடன் அன்றைய நிலவரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். லேசானது முதல் கடுமையான அறிகுறிகளை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த பொறுப்பு அவர்களுக்கு அவசியப்படுகிறது என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.