உலகையே நிலைகுலைய வைக்கும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பை ஆரம்பத்தில் எவ்வாறு அறிய முடியுமென்று அமெரிக்க எளிய முறையை கூறியுள்ளது.
உலக நாடுகளை நாளுக்கு நாள் அச்சுறுத்தி காவு வாங்கி வருகிறது கொரோனா வைரஸ்.காய்ச்சல், இருமல், சளி என பல தொல்லைகள் வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதைப்போல புதிய தகவல் ஒன்றை அமெரிக்க வெளியிட்டுள்ளது. அதில் காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி கூறியுள்ளார்.
அதாவது, ஒருவருக்கு ஒவ்வாமை, சைனஸ் அல்லது சளி போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி பொருட்களை முகர்ந்தால் அதோட வாசனை, மணம் தெரியாமல் இருந்தாலும், உணவுகளை சுவைத்தால் நாக்கில் சுவை ஏதும் தெரியாமல் இருந்தாலும், அது கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் இருக்க கூடிய அறிகுறிகள்ஆகும் எனா அவர் கூறினார்.
இவ்வாறு முகரும்பொழுது மணம் தெரியாமலும், நாவில் உணவுகளின் சுவையின்ருசியை அறிய முயாமல் போனாலும், அவர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம் என முடிவுக்கு வந்து அதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். அத்துடன் தங்களை அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளவும் வேண்டும் என்று அவர் பரிந்துரைதுள்ளார். கொரோனோவால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு வாசனை நுகர்தல், நாவில் ருசி இல்லாமல் போனதாகவும் அவர் கூறினார்.