உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடுகளில் பிரிட்டன் 5 ஆவது இடத்தில் உள்ளது.
பிரிட்டனில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1,00,162 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஒரே வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1000 நபர்கள் கொரோனா பாதிப்பால் பலியாகியுள்ளார்கள். இதனால் உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டன் 5 ஆம் இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்சிகோ முதல் நான்கு இடங்களில் உள்ளது. இதற்கிடையில் பிரிட்டனில் கொரோனாவை கட்டுப்படுத்த பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கிலாந்தில் உடற்பயிற்சி செய்ய இருவர் கூடலாம் என்றும் பொது இடங்களில் மற்ற விஷயங்களுக்காக மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.