உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.54 கோடியை தாண்டி உள்ளது.
கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். சென்ற வருடம் மார்ச் மாதம் போன்று இந்த வருடமும் கொரோனா பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 12,54,15,873 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,12,81,536 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 27 லட்சத்து 56 ஆயிரத்து 060 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,13,78,277 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.