Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிப்பு… எம்எல்ஏக்கள் குணமடைய வேண்டி மும்மத பிரார்த்தனை..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் விரைவில் குணமடைய வேண்டி தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த தொற்றால் 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாதிப்படைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். களத்தில் இறங்கி மக்களுக்கு நிவாரண பணிகளை வழங்கிவந்த தங்களின் சட்டப்பேரவை உறுப்பினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த தொண்டர்கள் அனைவரும் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

அதனால் ராஜேஷ்குமார் எம்எல்ஏ மிக விரைவில் குணமடைந்து திரும்பவேண்டும் என வேண்டி இணையதளங்களில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தோழமை கட்சியினர், எதிர்க்கட்சியினர் போன்ற அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டம் குலசேகரம் நகர காங்கிரஸ் கட்சியினர் சார்பில் திருவட்டார் கிழக்கு வட்டார தலைவர் கான்ஸ்டன் கிளீட்டஸ் தலைமையில் கிள்ளியூர் எம்எல்ஏ குணமடைய வேண்டி பாய்காடு ஆர்.சி.தேவாலயத்தில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிராத்தனையில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் முழுமையாக குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். இதில் பங்குச்சந்தை பென்னி சேவியர், குலசேகரம் சாய்பாபா, ஆலய பொறுப்பாளர் சங்கர், காவஸ்தலம், முஸ்லிம் ஜமாத் இமாம் அப்துல் காதர் மன்னான் போன்றோர் பங்கேற்றனர்.

Categories

Tech |