ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று டெல்லியில் மத்திய உயர் மட்ட குழு கூட்டத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் கொரோனா இன்னும் முடிவிற்கு வரவில்லை. அதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அதே சமயத்தில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளேன். எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.