நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மபி முதலமைச்சர் சிவராஜ் சிங் கூறுகையில், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 9 சதவீதமாகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 87 சதவீதமாகவும் உள்ளது. பாதிப்பை காட்டிலும் குணமடைந்தோரின் எண்ணிக்கையே அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.