காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணமடைபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 5,850 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,787 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, சேலம், கோவை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 73 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,499 ஆக அதிகரித்துள்ளது.