பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள், கோவில்கள் ஆகியவை தமிழக அரசின் உத்தரவுபடி மூடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் சினிமா தியேட்டர்கள், கோவில்கள், உடற்பயிற்சி கூடங்கள், மது பார்கள் ஆகியவற்றை மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள், கோவில்கள், சலூன் கடைகள், மதுபான பார்கள், கூட்ட அரங்குகள் ஆகியவை மூடப்பட்டன.
அதேபோல் விளையாட்டு மைதானங்களும் மூடப்பட்டது. மேலும் அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் வழிபாட்டு தலங்களில் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கோவிலுக்கு வெளியில் நின்று வழிபாடு செய்தனர். மேலும் வங்கிகள் மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கியது.