Categories
தேசிய செய்திகள்

கொரோனா பேரிடர் காலம்….. பெண்கள் புகார் அளிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசுக்கு உதவியாக பலரும் உதவி செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் சிலர் உதவி செய்கின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவும் வகையில் பெண்கள் தங்களை தன்னார்வலராக இணைந்து, தங்கள் மொபைல் எண்ணை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். ஆனால் சில ஆண்கள் இந்த எண்களுக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்புவது, ஆபாசமாக பேசுவது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெண்கள் பெரும் மன சோர்வுக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கொரோனா பேரிடர் காலத்தில் ஆண்கள் இவ்வாறு இழிவான செயல்களில் ஈடுபடுவதை மிகுந்த வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற அத்துமீறல்களை எதிர் கொள்ளும் பெண்கள் [email protected] என்ற மின்னஞ்சலிலும் cybervolunteer.mha. gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |