Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கொரோனா போர் நடக்கும்போது…. நிலத்தை முன்வைத்து ஆயுதப்போர் எதற்கு…? – வைரமுத்து டுவிட்…!!!

பாலஸ்தீனத்தின் காஸா நகரத்தின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 149 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் குறித்து கவிஞர் வைரமுத்து தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் ஒரு சர்வதேச சமூகத்தின் கண்ணீர் ஆகிறது. இரு நாடுகளின் உரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த போர் நிறுத்தம் வேண்டும். உயிரை முன்வைத்து கொரோனா போர் நிகழும்போது நிலத்தை முன்வைத்து ஆயுதப் போர் தேவையா? இரு நாடுகள் மீதும் கவியட்டும் சமாதான பறவையின் இரட்டைச் சிறகுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |