கொரோனா பாதிப்பு, ஊரடங்கு, கனமழை, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் பீகார் மாநிலம் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் கொரோனா பாதிப்புகள் சமீப காலங்களாக அதிகரித்து கொண்டே வருகின்றன. சென்ற சில நாட்களுக்கு முன் முதல் மந்திரியின் உறவினர் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், முதல் மந்திரி நிதீஷ் குமார் தனது அலுவலக இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். பீகாரில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சென்ற 16ம் தேதி தொடங்கி வரும் 31ம் தேதி வரை பீகாரில் ஊரடங்கு அமலில் இருக்கும்.
இந்த ஊரடங்கு காலகட்டத்தில், அனைத்து அத்தியாவசிய சேவைகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இரயில், விமானம், வங்கிகள், மருத்துவமனைகள், விவசாயம் மற்றும் கட்டுமானம் தொடர்புடைய வேலைகளுக்கு மட்டும் அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டது.