தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்து வருகிறது.
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த கோவில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குவதற்காக அவர்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை கோரியுள்ளது. திருக்கோவில் பணியாளர்களின் இறப்பு சான்றிதழ், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார் என்பதற்கான மருத்துவ சான்றிதழை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.