கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து அனைத்து அதன் மருந்துகள் மற்றும் கருவிகள் 5% ஜிஎஸ்டி விகிதத்தில் விற்கப்படுகிறது. இதையடுத்து பிற மருந்துகள் 5-12 % வரையிலும்ஜிஎஸ்டி விகிதத்தில் விற்கப்படுகிறது என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தெரிவித்தார். நாட்டில் அரசு வழங்கக்கூடிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் 66 % மத்திய அரசால் நடத்தப்பட்டு வருவதாக சவுத்ரி தெரிவித்தார். கொரோனா வைரஸ் நோய் தொடங்கியபோது அனைத்து மருந்துகளையும் 5 -12 % வரை ஜிஎஸ்டி விகிதத்தில் விற்க முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கொரோனா குறித்த மருந்துகள் மற்றும் கருவிகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 5 % ஆக குறைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். இதனிடையில் சுகாதார காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி விகிதம் 18 % ஆக இருக்கிறது.
மூத்த குடிமக்கள் உடல்நலக்காப்பீட்டு பாலிசிகளுக்கு ரூபாய் 1 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம் என்று அமைச்சர் தெரிவித்தார். அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களால் பரிந்துரைக்கப்படும் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து சேவைகளுக்கும் (உடல்நலக் காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி உட்பட) ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் விலக்குகள் பரிந்துரைக்கப்படுகிறது என்று சவுத்ரி தெரிவித்தார். இப்போது உடல்நலக் காப்பீட்டு சேவைகள் மீதான சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) நிலையான விகிதத்தில் விதிக்கப்படுகிறது. அத்துடன் சுகாதார சேவைகளுக்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.