தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து 75 நாட்களுக்கு பிறகு இரண்டு தினங்களுக்கு முன் முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் இன்று முதல் மீண்டும் சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.