ஏழை நாடுகளுக்கும் தடுப்பு மருந்து கிடைத்தால் மட்டும்தான் தொற்றில் இருந்து விடுபட முடியும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டி உள்ளது. ஏழை நாடுகளும் தொற்றுக்கான தடுப்பு மருந்து பெறுவதை உலக நாடுகள் உறுதிப்படுத்தவேண்டும். அதுதான் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி என பெர்லினில் நடந்த மூன்று நாள் உச்சிமாநாட்டில் சுகாதார உலக சுகாதார தலைவர் டெட்ராஸ் தெரிவித்தார். அனைத்து நாட்டு தலைவர்களும் தங்கள் மக்களை பாதுகாக்க நினைப்பது இயற்கையான ஒன்று. அதற்காக சக்தி வாய்ந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அது உலக நாடுகள் முழுவதும் தடையின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும்.
ஒன்றை மட்டும் தெளிவாக சொல்கிறேன் தடுப்புமருந்து தேசியவாத மாற்றப்பட்டால் தான் கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க முடியும் என தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், பிரிட்டன் மற்றும் சில நாடுகள் நம்பிக்கைக்குரிய தடுப்பூசிகளை உருவாக்கும் நிறுவனங்களுடன் ஏற்கனவே ஆர்டர்களை பதிவு செய்து விட்டன. ஆனால் ஏழை நாடுகள் அது பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருப்பது அதிருப்தியை கொடுக்கிறது என டெட்ராஸ் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் 11.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.