Categories
உலக செய்திகள்

கொரோனா மையத்தில்ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்த விபத்து…. பலி எண்ணிக்கை 27 இல்லை 82…. வெளியான புதிய தகவல்….!!

கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையத்தில் ஆக்ஸிஜன் உருளை வெடித்து 82பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈராக்கிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கொரோனா நோயாளிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே நேற்றிரவு ஈராக்கில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையத்தில் ஆக்ஸிஜன் உருளை வெடித்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த அதிகார தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்தில் 82 பேர் பலியானதாகவும் 110 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |