கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் “வரும் முன் காப்போம்” என்றும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பற்றிய அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய மாநில அரசுகள் இந்த நோய்க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், இருந்தாலும் போர்க்கால நடவடிக்கைகள் இன்னும் அதிகமாகத்தான் தேவைப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளை உடனடியாக மூடியது வரவேற்புக்குரியது. பீதியை கிளப்பினாள் தண்டனை என்று அரசு அறிவித்துள்ளது. வதந்தியை கிளப்ப கூடாதுதான் அதே நேரத்தில் உண்மையை மறக்கவும் கூடாது.
கண்ணுக்கு தெரியாத எதிரியோடு நடக்கும் உயிரியல் போர் என்று சொல்லலாம். உலகம் எத்தனையோ சோகங்களை வென்றுள்ளது. அதை போல இதனையும் வெல்வோம், அதற்கு “வரும் முன் காப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.