Categories
கொரோனா சற்றுமுன்

கொரோனா ரிசல்ட் 1 மணி நேரத்துக்குள் கைக்கு கிடைக்கும்… புதிய பரிசோதனை அறிமுகம்…!!!

பெலுடா எனப்படும் புதிய பரிசோதனை முறை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா தற்பொழுது இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றினை கண்டறிவதற்காக பிசிஆர் எனப்படும் பரிசோதனை முறை நடைமுறையில் உள்ளது. இந்த பரிசோதனையில் ஒரு பரிசோதனைக்கு ரூபாய் 2400 வரை செலவாகும். மேலும் இப்பரிசோதனையில் கோரானோ முடிவினை தெரிந்துகொள்ள இரண்டு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியதிருக்கும்.

தற்போது இந்திய விஞ்ஞானிகள் ஒரு மணி நேரத்துக்குள் முடிவை தெரிந்து கொள்ள பெலுடா  எனப்படும் புதிய உபகரண தொகுப்பினை கண்டறிந்துள்ளனர். இதன் விலை ரூபாய் 500 தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பரிசோதனை 98% துல்லியமான முடிவினை தரக்கூடியது.இதன் மூலம் கருத்தரிப்பு பரிசோதனை போல காகிதத்தின் அடிப்படையில் எளிதாக தொற்றினை கண்டறியலாம்.

டெல்லியில் அமைந்துள்ள  சி.எஸ்.ஐ.ஆர். கல்வி நிலையத்தின் ஆராச்சியாளர்கள் இந்த புதிய உபகாரணித்தை கண்டறிந்துள்ளனர்.இந்த புதிய பரிசோதனையாது இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |