நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அதிகமாக பரவி வருகிறது .இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். மேலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர்.
இந்நிலையில் பாபநாசம், தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நிவேதா தாமஸ் அண்மையில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார். இதையடுத்து அவர் முதல் டோஸ் தடுப்புசியை எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கொரோனாவின் கொடூரம் எனக்கு நன்றாகவே தெரியும். எனவே மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.