கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவும் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். தற்போது தான் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன.
இந்த வைரஸ் உருமாறிக் கொண்டே வருவதால் இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என கிரேக்க எழுத்துக்களின் பெயர்கள் வைக்கப்பட்டது. கிரேக்கத்தில் 24 எழுத்துக்கள் மட்டும் இருப்பதால், அதற்கும் மேலாக பெயர்கள் தேவைப்படும். எனவே உருமாறும் வைரஸ்களுக்கு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர்களைச் சூட்ட உலக சுகாதார அமைப்பு பரிசீலித்து வருகின்றது.