ஒமைக்ரான் பதட்டம் அடையக்கூடிய உருமாற்றம் இல்லை என்றும், ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய உருமாற்றம் எனவும், மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் டெல்டா வகை வைரஸ் பரவல் தான் அதிகமாக உள்ளது எனக் கூறினார். மேலும் மைக்ரான் பதட்டம் அடையக் கூடிய வைரஸ் இல்லை எனவும், ஆனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வைரஸ் எனவும் கூறினார்.
தமிழ்நாட்டுக்கு வந்த 4,502 பயணிகளுக்கு பரிசோதனை செய்ததில், 6 பேர்க்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவித்த ராதாகிருஷ்ணன் கொரோனா தொற்று இருந்தாலே ஒமைக்ரான் என சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், டெல்டா வைரஸ் இன்னும் போகவில்லை எனவும், வயிற்றுப்போக்கு இருந்தாலே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.