Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா வந்தும் திருந்தாதவர்கள்… சீனர்களை சாடும் பிரபல இந்தி நடிகை..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொடங்கிய சீனாவில் மீண்டும் வவ்வால், தேள் போன்ற மாமிச உணவுகள் உண்பதை  பிரபல நடிகை கடுமையாக சாடியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி உயிர்களை உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. தற்போது சீனாவில் மட்டும் இந்த கொரோனோவால் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர்.

சீனாவில் வுஹான் நகரில் உள்ள ஒரு சந்தையில் உணவுக்காக பாம்பு, நாய், எலி, கரப்பான்பூச்சி, வவ்வால், முதலைகள், எறும்புத்தின்னி, ஒட்டகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகளின் இறைச்சிகளை உணவுக்காக விற்று வருகின்றனர். கொரோனா  வைரஸ் இந்த இறைச்சி சந்தையில் உள்ள ஒரு விலங்கின் கறியிலிருந்து தான்  மனிதர்களுக்கு பரவியதாக கூறப்பட்டது. கிருமியால் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள சந்தையில் வேலை பார்த்தவர்கள் தான்.

இப்போது சீனாவில் வைரஸின் தொற்று பாதிப்பு குறைந்து அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும் நிலையில், அங்கு இருக்கக்கூடிய சந்தைகளில் மீண்டும் இதே இறைச்சிகளை மக்கள் விற்கவும் வாங்கவும் தொடங்கி இருக்கின்றனர்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரபல  இந்தி நடிகை ஸ்ரத்தா தாஸ் சீனர்களை கடும் கோபத்தோடு சாடி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “‘கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகும் இப்படி வவ்வால், எலி, நாய்கள், கரப்பான் பூச்சி, முயல், தேள் இதையெல்லாம் திண்கிறீர்களே? உங்களுக்கு புத்தி இல்லையா?” என்று கடுமையாக கண்டித்துள்ளார். அவரது பதிவுக்கு ஆதரவாக மேலும் ஏராளமானோர் சீனர்களை திட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

 

Categories

Tech |