குஜராத் மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். இந்த தீ விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்த காரணத்தை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி விஜய் ரூபிணி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்