பிரிட்டனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைக்க பரிசோதனை முறைகளில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிது. குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கையை குறைக்க பரிசோதனை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னதாக, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், பிரிட்டன் செல்வதற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், புதிய விதிகளின்படி, வரும் வெள்ளிக்கிழமை முதல் ரேபிட் கருவி மூலம் சோதனை செய்து, அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டால், பிசிஆர் சோதனை செய்து கொள்வது கட்டாயமாக இருந்தது. இந்த விதிலும் ஜனவரி 11ஆம் தேதி முதல், மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் கீழ் சபையில் போரிஸ் ஜான்சன் பேசுகையில், கொரோனா பரிசோதனை வசதிகள், தேவைப்படுவோருக்கு சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கூறினார் .மேலும் பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
கடந்த ஒன்பது நாள்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது” என்றார்.பிரிட்டனில் புதன்கிழமை மட்டும் 1,94,747 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகள் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றன என்று கூறினார. மேலும், தேசிய சுகாதார சேவை நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இருப்பினும், கடும் விதிகள் அல்லாத ‘பிளான் பி’ திட்டத்தை அமல்படுத்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
.