Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா விதிகளை மீறினால்…. கடைகளுக்கு கட்டாயம் அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பண்டிகை காலங்கள் வருவதால் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்த்து, அரசின் முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி குறைவான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வணிக வளாகங்கள், சந்தைகள் மற்றும் அங்காடிகள் அதிகமுள்ள தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு மற்றும் பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |