Categories
உலக செய்திகள்

கொரோனா விதிகளை மீறிய பிரதமர்… ரூ.1.75 லட்சம் அபராதம்…!!!

கொரோனா விதிமுறைகளை மீறியதாக நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது 60வது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடிய போது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறியதாலும், பத்துக்கும் மேற்பட்டோர் விழாவில் கூறியதாலும் பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நார்வே இருப்பதில் வியப்பில்லை.

Categories

Tech |