நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வந்தனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று ஒரு நாளில் மட்டும் 35,726 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டியது. இதையடுத்து நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஷாப்பிங் மால்கள் இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை மூட உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் மஹாராஷ்டிராவில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை தொடர்ந்து மக்கள் மீறினால் ஊரடங்கு போல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.