Categories
உலக செய்திகள்

கொரோனா விதிமுறை தளர்த்தும் திட்டம் இல்லை… பிரபல நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு…!!!!!

ஜெர்மனியில் covid-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் விதிமுறை முடிவுக்கு கொண்டுவரப்படாது  என சுகாதாரத்துறை Karl Lauterbach அமைச்சர் கூறியுள்ளார். மேலும் தனிமைப்படுத்துதல், கட்டுப்பாடுகளை நீக்குவது இன்னும் அதிக தொற்று நோய்களைக் கொண்டு வரும் என்ற கவலைகள் எழுப்பப்பட்ட திட்டத்தை மாற்றி அமைத்ததாக கூறப்பட்டுள்ளது. கொரோனா  வைரஸ் ஒரு ஜலதோஷம் அல்ல அதனால் தான் நோய் தொற்றுக்கு பிறகு தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் காரல் வாட்டர்பாக் ட்விட்டரில் கூறியுள்ளார்.

மேலும் கட்டாய தனிமைப்படுத்தப் படுதலுக்கு முக்கிய புள்ளி வைப்பதன் மூலமாக அவர் தவறு செய்து விட்டதாக கூறியுள்ளார். தற்போது உள்ள விதிகளின்படி covid-19 உள்ளவர்களுக்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட வேண்டும். அந்த காலகட்டத்தின் முடிவில் covid-19 பரிசோதனையின் பரிந்துரையின் தன்னார்வமாக 5 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு மாறு மாறு காரல் வாட்டர்பாக் கடந்த வாரம் பரிந்துரைத்துள்ளார். மேலும் ஜெர்மனியில் மருத்துவ ஊழியர்கள் தவிர தனிமைப்படுத்தப்படும் முடிவுக்குக் கொண்டுவரும் யோசனை வெளியிடப்பட்டுள்ள நிலையில் சமீபத்திய வாரங்களில் covid-19 எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனைகள் மற்றும் பல பணியிடங்களில் பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒமிக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்படுவோர் கடுமையான நோய்களுக்கு ஆளாவது இல்லை என்ற காரணத்தினால் இந்த யோசனைக்கான ஆதரவு குறைந்து விட்ட போதிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அக்டோபரில் இருந்து தடுப்பூசி போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

Categories

Tech |