Categories
உலக செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு… அதிரடியாக களமிறங்கிய கூகுள்…!!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த கூகுள் நிறுவனம் களமிறங்கியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த 15 கோடி அமெரிக்க டாலரை கூகுள் நிறுவனம் ஒதுக்க உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து உள்ளிட்ட விழிப்புணர்வுக்காக இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |