ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்துபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் செய்தி ஊடக ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், “கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் அதுவே உங்களுடைய பங்களிப்பாக இருக்கவேண்டும். அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள். அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள்” என தெரிவித்துள்ளார்.