Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா விழிப்புணர்வு… மாஸ்க் அணிந்து போஸ் கொடுத்த நதியா… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை நதியா மாஸ்க் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ‌.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றன. மேலும் திரையுலக பிரபலங்களும் தங்கள் சமூக வலைத்தளங்களில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர் .

இந்நிலையில் தமிழ் திரையுலகில் 80களில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நதியா இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் அவர் ‘கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாகி வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் மாஸ்க் அணிவதை மறக்க வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை நதியா மாஸ்க் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |