சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே கிராமத்தை சேர்ந்த 16 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள காருவள்ளி பகுதியிலிருக்கும் மரக்கோட்டை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வேலை நிமித்தம் காரணமாக அடிக்கடி பெங்களூர் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சளி மற்றும் காய்ச்சல் இருப்பதாக அப்பகுதியிலுள்ள மக்கள் 4 பேர் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த கிராமத்திற்கு சென்று மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் மற்றும் சளி உள்ள 15 க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்தபோது அதில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவ அலுவலர் டாக்டர் சாதுபக்த சிங் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலைகள் அடைக்ப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.