Categories
Uncategorized தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் திருப்பதி கோவிலுக்கு வர வேண்டாம் – தேவஸ்தானம் வேண்டுகோள்! 

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதால் அதன் தொற்று இருப்பவர்கள் திருப்பதி கோவிலுக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 கொரோனா பாதிப்பு குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் தேவஸ்தான நிர்வாகி தர்மா ரெட்டி பேட்டியளித்தார். 

அப்போது சுவாமி தரிசனம் செய்வதற்கான வைகுண்டம் காத்திருப்பு அறை, மொட்டை அடிக்கும் கல்யாண கட்டா, அன்னதான கூடம் ஆகிய பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருப்பதால், காய்ச்சல் சளி உள்ளிட்ட நோய் அறிகுறி இருப்பவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதேபோன்று பக்தர்கள் கூடும் இடங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

Categories

Tech |