கொரோனா வைரஸ் மனிதர்களால் மனிதர்களுக்கு மட்டுமே பரவுகிறது என்றும், விலங்குகளால் பரவுவது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்று கூறினார். மேலும் வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவ வில்லை என்றும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மட்டுமே பரவுகிறது என்றும் கூறினார். நீங்கள் தடுப்பூசி போட்டி இருந்தால் அனைவருக்கும் உடல்வலி ,காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகள் வருவது கட்டாயமில்லை. இந்த அறிகுறிகள் உணரவில்லை என்றாலும் நீங்கள் சாதாரணமாக இருக்கலாம்.
நீங்கள் எப்பொழுதும் செய்யும் வேலையை செய்யலாம். மாஸ்க் அணிவது , சமூக இடைவெளியை பின்பற்றுவது, சுகாதாரம், தேவையற்ற கூட்டங்களை தவிர்ப்பது, வீட்டில் இருப்பது போன்ற நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தொற்று அதிகரித்துள்ளது. தினமும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 3000க்கு மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.