கொரோனா அடுத்தடுத்து பகுதிகளில் பரவி வரும் வேளையில், கேரளாவில் மேலும் 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது.
கேரளா மாநிலத்தில் 3 வயது குழந்தைக்கு இந்த வைரஸால் பதிப்பட்டிருப்பது பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை மேற்கொண்டதில் அக்குழந்தையின் பெற்றோரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.