கொரோனா தொற்று அமெரிக்காவை தலைகுனிய வைத்து விட்டதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்
உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா அமெரிக்காவில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அந்நாட்டில் பாதிக்கப்பட்டு, 1,21,000 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின் அடிப்படையில் தெரியவருகின்றது.
நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 25 மாநிலங்களில் அதிக அளவு புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது.இந்நிலையில் கொரோனா அமெரிக்காவை மண்டியிட வைத்து விட்டதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் டாக்டர் ராபர்ட் ரெட்பீல்டு கூறியுள்ளார். ஹவுஸ் எனர்ஜி அண்ட் காமர்ஸ் கமிட்டி விசாரணையின் போது அவர் கூறியதாவது, இந்தத் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் செய்யக்கூடிய சிறந்ததை நாங்கள் செய்துள்ளோம்.
ஒரு சிறிய தொற்றினால் ஏழு ட்ரில்லியன் டாலரை நாடு செலவழிக்க போகின்றது. கொரோனா தொற்று அமெரிக்காவை தலைகுனிய வைத்துள்ளது. பொது சுகாதார தரவுகளின் முக்கிய திறன்களில் ஏராளமான தசாப்தங்களாக குறைந்த அளவு முதலீட்டை இந்த வைரஸ் எடுத்துக்காட்டுகின்றது உடைந்துபோன அமைப்பை சரிசெய்வதற்கான நேரம் இது என கூறினார்