Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!

கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தள்ளார். கொரோனா வைரஸால் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் பல நாடுகள் பொருளாதார இழப்பீடு வழங்குகின்றன என்றும் பேரவையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இந்த வைரஸால் இதுவரை இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவில், வணிக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள், பார்க், டாஸ்மாக் என மக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டுள்ளனர். சென்னை தி நகர் உட்பட முக்கிய நகரங்களில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. சிறு, குறு நடுத்தர தொழில்கள் முடங்கியுள்ளதால் வியாபாரிகளை, பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |