சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் 45 லட்சம் மக்கள்தொகை உள்ள நகரத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் முதன் முறையாக கொரோனா தொற்று வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்றால் பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தொற்று பரவல் தற்போது சீரடைந்து வந்தது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீன நாட்டின் வட கிழக்கு பகுதியிலுள்ள ஜிலியன்நகரத்தில் கொரோனாவின் தாக்கம் மறுபடியும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 45 லட்சம் மக்கள்தொகை உள்ள ஜிலின் நகரத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.