புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 ஆயிரத்து 343 பேர் சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.