Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தேவையில்லாம்ம வெளியில்ல வரக்கூடாது…. மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்..!!

செங்கல்பட்டு மாவட்டதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் தேவை இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றியவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாமல்லபுரம் புறவழிச்சாலையிலுள்ள பல்லவன் சிலை அருகில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மாமல்லபுரம் காவல் துறையினர் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து இரு சக்கர வாகனத்தில் தேவை இல்லாமல் ஊர் சுற்றிய நபர்களை மடக்கி பிடித்து அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |