நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 208 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது பள்ளி ஆசிரியர், பேருந்து டிரைவர் உட்பட ஒரே நாளில் 208 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 ஆயிரத்து 973 பேர் சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.