புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 65 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 65 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 ஆயிரத்து 461 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 742 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.