ஸ்விட்ஸர்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அலென் பெர்ஸட் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை மறைத்ததாக அவர் மீது கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்விட்ஸர்லாந்தின் சுகாதாரத் துறை அமைச்சர் மீது அமைச்சரான அலென் பெர்ஸட் கொரோனா இரண்டாவது அலையை தவிர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை விதித்த பெடரல் சுகாதாரத்துறை அழைப்பின் ஆவணத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பெடரல் சுகாதாரத்துறை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி பெடரல் கவுன்சிலுக்கு 12 பக்க ஆவணங்களை கொடுத்து, இதனை வலியுறுத்துமாறு தெரிவித்துள்ளது. அதில் மாஸ்க் போடுவது, உணவகங்களை மூடுவது போன்ற கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு தெரிவித்துள்ளது.
மேலும் அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. அனால் பெடரல் கவுன்சிலுக்கு அந்த ஆவணத்தை பெர்ஸட் அனுப்பவே இல்லை. இதனால் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி பலரும் ஒரு இடத்தில் கூடுவதற்கு தடை முதலான கட்டுப்பாடுகளை பெடரல் கவுன்சில் நிகழ்த்தியுள்ளது. இதனால் தான் ஸ்விட்ஸர்லாந்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவியதாக தொற்றுநோயியல் நிபுணர்கள் பெர்ஸட் மீது குற்றம்சாட்டியுள்ளார்கள்.மேலும் இந்த குற்றச்சாட்டு குறித்து பெர்ஸட் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.