நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இதனால் ஒருசில மாநிலங்களில் கொரோன குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த தளர்வுகளை பயன்படுத்தி மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படும்.
இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை எனவே தளர்வுகள் அறிவிக்கக் கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் மக்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் முழுமையான தளர்வுகள் வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.