கொரோனா இரண்டாம் அலை சுனாமி போல் இருக்கலாம் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மும்பையில் நேற்று உரையாற்றிய உத்தவ் தாக்கரே நம்மிடம் தடுப்பூசி மற்றும் கொரோனாவுக்குகான சிகிச்சையும் இல்லை அதனால் அதுவரை தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்ப்பது உள்ளிட்டவையே சிறந்த தடுப்பு நடவடிக்கையாக இருக்க முடியும் என்று தெரிவித்த அவர் மீண்டும் ஒரு பொது அடக்கம் வேண்டாம் என்றார்.
அனைத்து பண்டிகைகளும் கட்டுப்பாடுடன் கொண்டாடினாலும் ஆபத்தின் வீரியம் இன்னும் குறையவில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்தார். முன்னதாக பூனேவில் பேசிய துணை முதல்வர் அஜித் பவார் அடுத்த 8 முதல் 10 நாட்கள் நிலைமையை கண்காணித்து ஆய்வு செய்து பொது முடக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.