Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா 2-வது அலை அச்சுறுத்தல்… அரசின் அதிரடி உத்தரவால்… அமலுக்கு வந்த புதிய கட்டுபாடுகள்..!!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் சலூன் கடைகள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி பக்தர்களுக்கு வழிபாட்டு தலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சலூன் கடைகள், சினிமா தியேட்டர்கள், மதுபான பார்கள் உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவை நேற்று முதல் மூடப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால் 19 தியேட்டர்கள் மூடப்பட்டன. மேலும் சலூன் கடைகளும், உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டன. இது தவிர வணிக வளாகங்கள், மதுபான பார்களும் மூடப்பட்டன. அதேநேரம் காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட இதர கடைகள் இரவு 9 மணி வரை வழக்கம்போல் திறந்திருந்தன.

Categories

Tech |