Categories
மாநில செய்திகள்

கொரோனா 3-ம் அலை வருமா? விளக்கிய இந்திய வல்லுநர்….!!

 கொரோனா புதிய வகை தொற்று உருவாகாத வரை இந்தியாவில் மூன்றாம் அலை பரவ வாய்ப்பில்லை என ககன்தீப் கங்க் கூறியுள்ளார்.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனாவைரஸின் முதல் அலை முடிந்த நிலையில் இரண்டாம் அலையால் அல்ல பட்டு வருகிறோம். இந்த நிலையில் மூன்றாம்  அலையை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் கொரோனா சுகாதாரம் குறித்த கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.  அண்மையில் காணொளி வாயிலாக நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்தியாவின் பேராசிரியரும் பெருந்தொற்று வல்லுநருமான ககன்தீப் கங்க்  பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார். அவர் பேசுகையில் இன்னும் சிறிது காலத்திற்கு கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இந்நிலையில்  இந்தியாவில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக சரியாகி விட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் பதில் அளிக்க வேண்டும். மூன்றாம் அலையின் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. அதே நேரத்தில்புதிய வகை தொற்று உருவானால் மட்டுமே மூன்றாம் அலை ஏற்படும் என்று கூறினார். மேலும் பேசிய அவர்  கொரோனா போன்ற பெரும் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் தொழில் நுட்ப வளர்ச்சியை  பயன்படுத்தி அதற்கு ஏற்றவாறு நாம் சுகாதார கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |